Thursday , December 13 2018
Home / Headlines News / வென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..
இந்தியா

வென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..

பல கோடி ரூபாக்களுக்கு விலை போகாமல் – காட்டாட்சியின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் இன்று மாலை வென்றது நீதிக்கான ஜனநாயகப் போராட்டம்!

தற்றுணிவுடன் தீர்ப்பை வழங்கிய பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமை நாம் தலைவணங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது மைத்திரியின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக அனல் பறக்கும் வாதங்களை முன்வைத்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பியையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வாழ்த்தாமல் இருக்கமுடியாது.

வாழ்த்துக்கள் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களே!

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …