Breaking News
கருவை பையில்

கருவை பையில் எடுத்துச் சென்ற பெண்: அதிர்ச்சியில் காவல்துறை!

உத்திர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், 5 மாத கருவை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோ அருகே உள்ள ஹசன்புர் போலீஸ் நிலையத்துக்கு இளம் பெண் ஒருவர், ஒரு பையுடன் வந்துள்ளார். துர்நாற்றம் வீசிய அந்தப் பைக்குள் 5 மாத கரு ஒன்று இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன், ஒரு இளைஞர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகவும், திருமணம் செய்ய மறுத்ததால், தனது 5 மாத கருவை கலைத்ததாகவும் கூறினார்.

மேலும், கருவைப் பையில் எடுத்து வந்திருப்பதாகவும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் பெண் புகார் அளித்தார். இதையடுத்து, கருவைப் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

About அருள்

Check Also

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுடன் நேற்று …