Thursday , December 13 2018
Home / Headlines News / ஒருதலை காதல் விபரீதம்: மாணவியை நடுரோட்டில் கொன்ற பயங்கரம்; உதவி செய்யாமல் போட்டோ எடுத்த பொதுமக்கள்!

ஒருதலை காதல் விபரீதம்: மாணவியை நடுரோட்டில் கொன்ற பயங்கரம்; உதவி செய்யாமல் போட்டோ எடுத்த பொதுமக்கள்!

காதலை ஏற்க மறுத்த மாணவியை நடுரோட்டில் சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே-வை சேர்ந்த கல்லூரி மாணவி பிராச்சி ஸேட். இவரை நெடுநாளாக இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

அவரது காதலை மனைவி ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது டூவீலரில் சென்ற அப்பெண்ணை ஆர்டிஓ அலுவலகம் அருகே, மறித்த அந்த இளைஞர், ‘என் காதலுக்கு என்ன பதில்?’ என்று கேட்க, ‘நான் உன்னைக் காதலிக்கல . அடிக்கடி என்னை இப்படி தொந்தரவு பண்ணாத.

போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருவேன்’ என்று மாணவி கூறியுள்ளார்.

இதையடுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் பிராச்சியை நடுரோட்டில் வைத்து சரிமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த அப்பெண் ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் தப்பி ஓடி விட்டார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிலர் உதவி செய்ய முன்வராமல் புகைப்படம் எடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், பிராச்சியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் ஆகாஷ் பவார் என்பவரைக் கைது செய்தனர். ஆகாஷ், பலமுறை பிராச்சியை தொடர்ந்து சென்று காதல் டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஏற்கனவே போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

போலீசார் அப்போது ஆகாஷை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போதே வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …