Breaking News
தொழிலாளர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்

தொழிலாளர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்

தொழிலாளர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்

நட்டத்தில் இயங்குகின்ற பெருந்தோட்டங்களை கையேற்று, பகிர்ந்தளிக்கும் விடயத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தேயிலை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, பிரதானமான 20 தோட்ட நிறுவனங்களில் 10 செயலிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறு தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யும்போது பெருந்தோட்ட நிறுவனங்களின் உற்பத்தியின் அளவு வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்வாறு நட்டம் அடைவதற்கும், செயலிழப்பதற்குமான காரணங்களை குறுகிய காலத்தில் இனங்கண்டு நிரந்தர தீர்வுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேநேரம், நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் செயற்திட்டமாக, சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கையளித்து செயற்படுத்துவதற்கும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவது குறித்து மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் அண்மைக்காலங்களில் பெரிதும் பிரஸ்தாபித்து வருகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த தீர்மான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக எமது செய்தி சேவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானை தொடர்புகொண்டு வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், நட்டத்தில் இயங்குகின்ற பெருந்தோட்டங்களை கையேற்று, பகிர்ந்தளிக்கும் விடயத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

நேற்றைய தினம் நாட்டில் 17 கொரோனா தொற்றாளர்கள்

தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

About அருள்

Check Also

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக …