Breaking News
கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்

கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்

கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்

உலக பொது பொருளாக கொண்டு சமமுடன் பகிரப்பட வேண்டும். அதற்கு பதிலாக தனிப்பட்ட நபருக்கான பொருட்களாக பயன்படுத்தப்பட கூடாது என கூறினார்.

உலக நாடுகளின் தலைவர்கள் இந்த தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் சமீப வாரங்களில் வரவேற்கத்தக்க முடிவுகள் காணப்படுகின்றன. இவை சுரங்க முடிவில் காணப்படும் வெளிச்சம் போல் பிரகாசமுடன் உள்ளது. தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை நாம் தொடங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்து தேவைகளுக்கான நெருக்கடியில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள், ஏழை மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை மிதிக்க கூடிய உலகை நாம் ஏற்க கூடாது என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்றை போன்று அடுத்த தொற்று ஏற்படாமல் இருக்க, அதனை தடுக்கும் வகையில் தயார்படுத்தி கொள்ள உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

அனைத்து படைகளையும் வாபஸ் பெற டிரம்ப் உத்தரவு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …