Friday , January 18 2019
Home / உலக செய்திகள்

உலக செய்திகள்

World News

தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோற்கடிப்பு!

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரசா மே ஆட்சி மீது மீண்டும் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தும் (பிரிட்டன்) அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் செயற்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு …

Read More »

கனேடியருக்கு சீனாவில் மரண தண்டனை!

சீனா

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கனேடியருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த கனேடிய பிரஜைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சீன நீதிமன்றம் …

Read More »

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப் மகள்

உலக

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விட அமெரிக்க மக்களிடையே பெரும் புகழ் பெற்று விளங்குகிறார் அவரது மகள் இவானா டிரம்ப். சமூக சேவை செய்யும் அக்கறையில் இருக்கும் இவர் சமீபத்தில் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் இந்த நிலையில் சமீபத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பதால் விரைவில் உலக வங்கிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். உலக வங்கி தலைவர் …

Read More »

மாணவர்களை மயக்கி உல்லாசம்: பள்ளி ஆசிரியை கைது

மாணவர்களை

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ரோச்சஸ்டர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கேத்ரின் மேரி(26) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேரி பள்ளியில் படிக்கும் 16, 17 வயது மாணவர்களுடம் எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளார். மேரியின் நடவடிக்கைகளில் சந்தேகித்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்ததில் மேரி மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். …

Read More »

பாரிஸில் வெடிப்பு! 20 பேர் படுகாயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர் என்று வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். …

Read More »

பிரான்சில் மீண்டும் வலுப்பெற்றது மஞ்சள் அங்கி போராட்டம்

பிரான்சில் மீண்டும்

பிரான்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பொது மக்களும் கைகோர்த்ததால் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து தொடங்கிய போராட்டம், அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக திரும்பியதால் பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். கார் டிரைவர்கள் அணியும் மஞ்சள் …

Read More »

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில்

இந்தோனேசியாவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 40 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. டிசம்பர் …

Read More »

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து

ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தான் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது படாக்‌ஷான் என்ற மாகாணம். இங்குள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகையில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். தங்கம் கிடைப்பதாக நம்பிய உள்ளூர்வாசிகள் அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களாகவே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு தோண்டப்பட்ட சுமார் 200 அடி ஆழ சுரங்கத்திற்குள் சிலர் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக …

Read More »

சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 120 பேர் பலி

சிரியாவில்

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போரால் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் துருக்கி படைகளும் …

Read More »

எரிமலை எப்படி வெடித்தது? சேட்டிலைட் புகைப்படம்

எரிமலை

இந்தோனேசியாவை புரட்டிப் போட்ட டிசம்பர் 22 ஆம் தேதி சுனாமிக்கு காரணாமான அனாக் க்ராகட்டாவ் என்ற கடலடி எரிமலை வெடிப்பின் பிரும்மாண்டத்தைக் காட்டும் சிறந்த செயற்கைகோள் ஆப்டிக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சுண்டா ஜலசந்தியில் நிலவிய மோசமான வானிலையால், ஸ்கைசாட், டோவ் செயற்கைக் கோள்களால் புகை, மேகமூட்டத்தின் நடுவே பூமியை காண்பது சிரமமாக இருந்தது. புவியை நம் கண்கள் காணும் அதே வித ஒளியில் காண்பவை இந்த செயற்கைக் கோள்கள். இதனிடையே …

Read More »