உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு : 1.63 கோடியை தாண்டியது

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு : 1.63 கோடியை தாண்டியது

உலகளவில் குறைந்தது 1.62 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 650,000 ஐ தாண்டியுள்ளது.

கொரோனா தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,396,954, ஆக அதிகரித்து உள்ளது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 651,902 ஆக உள்ளது. கொரோனா பாதித்து, அதற்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 9,512,561 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கையில் அமெரிக்கா இன்னும் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் 4,286,663 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. இதில் 147,588 க்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த நோயால் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா (4,286,663), பிரேசில் (2,442,375), இந்தியா (1,435,453), ரஷ்யா (816,680) மற்றும் தென்னாப்பிரிக்கா (452,529).

சீனாவில் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று உச்சகட்டத்தை எட்டியது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் மிகவும் அதிக அளவில் அதிகரித்திருந்தது.

வியட்நாமில் ஏப்ரலுக்குப் பிறகு முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியானதால் தாநாங் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டது.

மொராக்கோவில் நோய்த்தொற்று பரவல் உச்சத்தில் இருப்பதால், முக்கிய நகரங்களுக்கிடையே பயணம் செய்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 6993

Today rasi palan – 28.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 28, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)   இன்றைய …