உலக செய்திகள்முக்கிய செய்திகள்

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டணை பெற்றிருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஏஞ்சினர் என்ற நெஞ்சு வலி நோயால் அவதிப்பட்டு வந்தார்.

ஆனால்,தனது தந்தைக்கு சிறைக்குள் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகள் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போது திடீரென்று நவாஸ் ஷெரீப்பின் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் ஆக குறைந்ததால் அவர் உடல் நிலை மிகவும் மோசமானது.

இதனால் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், ரத்த அணுக்களை அதிகரித்து உயிரை காப்பாற்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க :

Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்

சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

Tags
Show More

Related Articles

Back to top button
Close