இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

ஒரு தொகை கேரளாக் கஞ்சாவுடன் வவுனியா இளைஞர்கள் சிக்கினர்!!

குருந்துவத்தை, ஹெட்டேவத்தை பிரதேசத்தில் ஒரு தொகை கேரளாக் கஞ்சாவுடன் இளைஞர்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோ 585 கிராம் கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேசத்தைச் ​சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close