இளம் குடும்பப் பெண்ணின் உயிரிழப்பில் மர்மம் – தீவிர விசாரணை

0
13

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தாவடி தெற்கு, காளி கோவில் வீதியில் வசிக்கும் 31 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது கணவரும், மகளும் பிரான்சில் வசிப்பதாகவும் குறித்த பெண் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு உணவருந்தி விட்டு உறங்கச் சென்றிருந்த நிலையில் மறுநாள் அவர் எழுந்திருக்கவில்லை என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் உடற்பாகங்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கொழும்பு அரச வைத்திய பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.