Friday , 25 April 2025
ஜனாதிபதி
FILE PHOTO: Sri Lanka's President Ranil Wickremesinghe looks on during an interview with Reuters at Presidential Secretariat, amid the country's economic crisis, in Colombo, Sri Lanka August 18, 2022. REUTERS/ Dinuka Liyanawatte

ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்!

Spread the love

ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

தூதரகத்திற்குச் சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது.

ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பைப் பதிவிட்ட பின்னர், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு ஈரான் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News