உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

விசேட தினமாகக் கருதி இன்றைய தினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வினவுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …