சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
இதுவரை 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம்