தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை – அமித் ஷா

தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு 14 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவை கேள்வி கேட்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்றும் அமித் ஷா இந்தியா டுடே கருத்தரங்கில் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் ஊழல்கள் மூலமாக மக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக அவர் விமர்சித்தார்.

Check Also

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். …