பஸ் மோதி மாணவி பலி

0
16

கம்பளை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் பலியானியுள்ளார். இன்று காலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் வைத்து மாணவிமீது மோதியுள்ளது.

படுகாயமடைந்த தரம் ஐந்தில் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவியொருவரே, குருந்துவந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அன்று காலை பஸ்ஸில் இருந்து இறங்கி, பாசாலைக்கு செல்லும்வழயிலேயே பஸ் மோதியுள்ளது. மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கருந்துவந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.