பஸ் மோதி வயோதிப பெண் பலி

0
24

கம்பளை, எக்கால நகரில் இன்று மதியம் பஸ்மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை நகரில் இருந்து உலப்பனைவரை பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் மோதியே 70 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.

சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் எக்கால பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.