போக்சோ வழக்கை சட்டப்படி சந்திப்பேன்… – எடியூரப்பா

0
14

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூருவில் பேட்டியளித்த அவர், ஒரு மாதத்திற்கு முன் தனது வீட்டு வாசலுக்கு வந்த பெண் ஒருவர் காவல் துறையால் தனக்கு அநீதி நடந்ததாக தம்மிடம் முறையிட்டதாக கூறினார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அப்பெண் திடீரென தம்மீதே குற்றம்சாட்டியதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று எண்ணி காவல்துறை ஆணையரிடம் அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார். உதவி செய்தால் உபத்திரவமாக முடிவதை என்னவென்று கூறுவது என்றும் சிரித்தபடி கூறினார் எடியூரப்பா.