பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த இரண்டு மாணவர்கள் பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ஆறு வயது மாணவனும், ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வரும் போது போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இருபத்தொரு வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.