மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க

0
7

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தி.மு.க. கூட்டணி நிறைவு செய்துள்ளது.

அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளை இறுதி செய்யப்பட்டது

தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

இம்முறை பழைய வேட்பாளர்களுடன் புதுமுகங்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முந்தைய தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற திருச்சி தொகுதி இம்முறை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிட இருப்பதாக வைகோ அறிவித்தார்.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க. ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 23-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, அதற்கு முன் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.