யாழ்ப்பாண அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

0
0

அதிபர் – ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று (12) தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ” சுபோதினி ஆணைக்குழுவின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு சம்பள உயர்வை வழங்கு, மாணவர்களுக்கான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து, பெற்றோர் மீது சுமையை அதிகரிக்காதே, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு,அதிபர் ஆசிரியர்களை ஏமாற்றாதே மற்றும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துக” உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.