Friday , 25 April 2025

விஜயதாச ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Spread the love

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் அதன் அரசியல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகியோர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களையடுத்து கடுவலை மாவட்ட நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News