விஜித் குணசேகரவுக்கு விளக்கமறியல்

0
8

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று(9) முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார்.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.