Friday , 25 April 2025

விடுதலை புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது

Spread the love

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள்  நேற்று (7) இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காவல்துறை தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் காவல்துறை பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News