Tuesday , 14 October 2025

அமெரிக்க வரி விதிப்பு – 15 நாடுகளுடன் கலந்துரையாட ட்ரம்ப் தீர்மானம்

சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதைத் தாற்காலிகமாக ட்ரம்ப் நிறுத்தினார்.

இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Check Also

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் …