அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, 2025 வரவு செலவு திட்டத்தில் தீர்வு
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேலதிக நிதி ஆதாரங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தற்போது முடியவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில், அரசாங்க திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளுக்குள் உள்ள முரண்பாடுகள் உட்பட சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த சம்பளப் பிரச்சினைகளுக்கு விரிவான தீர்வுகளை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரித்தமை குறிப்பிடத்தக்கது.