Sunday , 6 July 2025
உத்தரவாதம்

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கும் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மே தினத்தில் கூறியபடி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கத் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …