அர்ச்சுனாவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ள காவல்துறையினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் இன்றைய நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்வைக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அதேநேரம், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எனக் கருதப்படும் நபர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை அச்சுறுத்தும் வகையிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த வைத்தியர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் எவரையும் அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

சுன்னாகத்தில்

சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள்

சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள் மயிலிட்டியில் இருந்து சுன்னாகம் வந்து கொண்டு …