ஆசை காட்டி மோசம் செய்த இயக்குநர்
தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் நடிப்பால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நம்பர் நடிகை, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” என்ற படையப்பா வசனத்தை நினைவூட்டும் வகையில் இப்போதும் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார்.
ஆனால், அவரது சமீபத்திய படம் ஒரு பக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், மறுபக்கம் இணையத்தில் எழுந்த ட்ரோல்களால் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் படத்தில் நம்பர் நடிகை கதாநாயகியாக நடித்திருந்தாலும், இயக்குனர் அவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். படத்தில் அவருக்கு ஒரு பாடல் இல்லை, சென்டிமென்ட் காட்சிகள் இல்லை.
ஆனால், அதே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த முன்னணி நடிகை மற்றும் வளர்ந்து வரும் இளம் நடிகை, வெறும் இரண்டு மூன்று காட்சிகளில் தோன்றினாலும், அவர்களது காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்க வைத்துவிட்டன.
இணையவாசிகள் அந்தக் காட்சிகளை ட்ரெண்டாக்கி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், நம்பர் நடிகையின் காட்சிகள் பெரிதாக கவனம் பெறவில்லை.
இதனால், “இப்படி ஒரு படத்தில் நடிச்சது வேஸ்ட், டம்மி பாவா” என்று சிலர் கமெண்ட் செய்ய, இணையத்தில் ட்ரோல்கள் பரவின.இந்த விமர்சனங்களால் கடுப்பான நம்பர் நடிகை, தனது சமூக வலைதள பக்கத்தில் கோபத்தை கொட்டியிருக்கிறார்.
“சமூக வலைதளங்களில் உட்கார்ந்து மற்றவர்களைப் பற்றி முட்டாள்தனமான கருத்துகளை பதிவிடும் விஷமிகளே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துறீங்க? எப்படி தூங்குறீங்க? பெயர் தெரியாத கோழைகளே!” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் இவரது நடிப்பை கொண்டாடும் ரசிகர்கள், “அவர் எப்போதும் நம்பர் ஒன் தான்” என்று ஆதரவு தெரிவிக்க, மறுபக்கம் ட்ரோல்களால் மனமுடையும் நடிகைக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கருத்துகள் பகிரப்படுகின்றன.
இந்த கிசுகிசு சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நம்பர் நடிகையின் அடுத்த படமாவது இந்த ஏமாற்றத்தை துடைத்து, அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்