பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 15ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் சம்பாதித்த பணத்தை விட அதிகமாக செலவு செய்து விட்டதால் அவர்களுக்கு பிக் பாஸ் தண்டனை கொடுத்திருக்கிறார். அதைக்கேட்ட தர்ஷா குப்தா ஆண் போட்டியாளர்களை விளாசி எடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். இதில் முதல் போட்டியாளராக அறிமுகமான ரவீந்தர் முதல் எலிமினேஷன் ஆகி கடந்த வாரத்தில் வெளியே சென்று இருக்கிறார். ஆனால் போட்டியாளர்களை விடவும் நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்திருக்கும் விஜய் சேதுபதி பற்றி தான் அதிகமாக பேசப்படுகிறது.
விஜய் சேதுபதி முகத்துக்கு நேராக போட்டியாளர்களின் நிறை குறையை சொல்வது பலராலும் பாராட்டப்படுகிறது. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே விஜய் சேதுபதி பேசுகிறார் என்றும் பலர் கூறி வருகிறார்கள். கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் அழுகாட்சி காட்சிகளும், சண்டை கச்சேரிகளும் தான் நடந்தது. இதை வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி கடுமையாக கண்டித்து இருந்தார்.
அதனால் இந்த வாரத்தில் போட்டியாளர்களின் மத்தியில் புது உத்வேகம் தெரிகிறது. அதற்கு தகுந்த மாதிரி நேற்று டாஸ்க்கும் வெறித்தனமாக கொடுக்கப்பட்டது. கயிற்றில் தொங்கி அதிக நேரம் நின்று கொண்டிருந்த சத்யா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் நேற்று நடந்த உருட்டு டாஸ்க்கில் அதிகமான பணத்தை உருட்டி எடுத்தது ஆண்கள் தான்.
ஆனால் ஆண்கள் சம்பாதித்த எட்டாயிரம் பணத்தை விடவும் 12 ஆயிரத்திற்கு அவர்கள் பர்சஸ் செய்து விட்டதால் இனி நான் கொடுக்கும் பொருட்களை தான் ஆண்கள் சமைக்க வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லிவிட்டார். இதை கேட்டு அவர்கள் அணியில் பெண்களின் சார்பாக இருக்கும் தர்ஷா குப்தா இப்போ உங்களுக்காக நானும் சாப்பிடாமல் இருக்கணுமா? நீங்க அத்தனை பிளான் போட்டீர்களே கடைசியில் இப்படி சொதப்பி வச்சிட்டீங்களே என்று திட்டி விட்டு போக ஆண்கள் அனைவரும் அதிர்ச்சியாக இருக்கிறார்கள்.
பெண்கள் தர்ஷா பேசியதை கேட்டு சந்தோஷப்பட்டு கத்துகின்றனர். இந்த லேட்டஸ்ட் ப்ரோமோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் பலர் தர்ஷாவின் நடவடிக்கையை பாராட்டுகிறார்கள் சிலர் அதை விமர்சிக்கிறார்கள்.