Tuesday , 29 April 2025
இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி!

இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி!

இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி!
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியில் இங்கிலாந்து மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தநிலையில் 125 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

Check Also

“3 பாடங்களில் 9,457 மாணவர்கள் ‘A’ சித்தி”

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் …