இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 19ஆம் திகதி

Spread the love

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆராயப்படவுள்ளது.

அத்துடன் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.