இலங்கையர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை!

Spread the love

கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.