Friday , 25 April 2025

இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வரி விதிப்பு 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் ; சீன பொருட்களுக்கு 125 வீத வரி !

Spread the love

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10% உலகளாவிய வரி விதிக்கப்படும் என வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை ​125 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது – நளிந்த ஜயதிஸ்ஸ !

Spread the loveஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. …