உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: சாதனைப் படைத்த யாழ் இளைஞன்

Spread the love

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகின.

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ் மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மதியழகன் டினோஜன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.