Saturday , 10 May 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், தேசிய மக்கள் சக்தியின் சரிவை வெளிப்படுத்துகிறது – ஹர்ஷ டி சில்வா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் சரிவைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைக் கூறியுள்ளார்.

வாக்கு வங்கியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அரசாங்கத்தின் பலவீனத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்த உந்துதல் ஒரு புதிய ஆரம்பத்தை வெளிப்படுத்துகிறது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …