ஊழலுக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனத் தேசிய ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பகுதியில் நேற்று (24) முன்னணியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களை ஏமாற்றி தற்போது சம்பந்தன் ஐயாவின் மறைவிற்குப் பின்னர் பணத்திற்கு ஆசைப்பட்டு, பதவிக்கு ஆசைப்பட்டு சிதறுண்டுள்ளது.
இன்று 588 கோடி ரூபாய் ஊழலினை செய்த கட்சியும் தற்போது போட்டியிடுகின்றது.
இன்று இவர்கள் எல்லாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாய தேவையில் இருக்கின்றது.
ஜனாதிபதியின் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஊழலை முற்றாக ஒழிப்பேன்.
உடனடியாக ஏப்ரல் 21 தாக்குல் தொடர்பில் விசாரிப்பேன், கைது செய்வேன் என்று எல்லாம் ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதியிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இவை அனைத்தும் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என விநாயக மூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.