எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்!

இன்று நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி இந்த முடிவுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று, 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சுயேட்சை குழு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2,568.

அதன்படி, சுயேட்சை குழு, 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி 1,350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை தமதாக்கிகொண்டது.

தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.

அதற்கமைய, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளுக்கமைய, தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …