கடவுச்சீட்டை பெறுவதற்கான திகதி- நேரத்தை முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல்!

Spread the love

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுலாகியுள்ளது.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்தமாத இறுதி வரை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த முறையின் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரத் தேவையின் காரணமாக நபர் ஒருவர் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பாராயின் அவர் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பதில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.