காணாமல் போயிருந்த மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு!

காணாமல் போயிருந்ததாகக் கூறப்படும் கந்தேககெதர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 மாணவிகளில் ஒருவர், மஹியங்கனை – லொக்கல் ஓயாவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரே பாடசாலையில் கல்வி கற்றுவந்த, இரு மாணவிகள், பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

எனினும், அவர்கள் வீடு திரும்பாதமையினால், அவர்களது பெற்றோர் பதுளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தநிலையில், அதாவுல்பத்த பகுதியில் வீதியோரமாக நின்றிருந்தபோது நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்ட அவர்களில் ஒரு மாணவி, நபர் ஒருவரால் ரிதீமாலியத்த காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே மற்றைய மாணவி, சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …