குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை – யாழில் கொடூரம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உடுத்துறை வடக்கு, தாளையடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜெகசீலன் சங்கீதா (வயது 44) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டின் கழிவ றைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் துணியொன்றினால் பெண்ணின் கழுத்தை நெரித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ள மரு தங்கேணி பொலிஸார், தீவிர விசார ணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …