குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் பெண் படுகொலை

Spread the love

குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தகவ்லல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.