குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகியுள்ளார். சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்த குருபகவான் இந்த மாதம் முதல் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் மாதம் வரைக்கும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: ரோகிணி நட்சத்திரத்தில் குரு பயணம் செய்வதால் 12.6.24 முதல் 19.8.24 வரை வசதி வாய்ப்புகள் கூடும். புதிய வீட்டிற்குக் குடிப்போவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அலுவலகச் சூழலில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு. எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். ஆலய தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்: ஜென்ம குரு உங்கள் ராசிக்கு புதிய மாற்றத்தை தரப்போகிறது. குரு பகவானின் நட்சத்திர மாற்றம் வேலையில் இருந்த சிக்கல்களை நீக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேச இது நல்ல நேரம். கல்யாணத்திற்கு வரன் தேடி வரும். காதலிப்பவர்களுக்கு ஏற்ற காலம்.குருவின் பார்வையால் திருமணமான தம்பதியினருக்கு சுப செய்திகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பதவிகள் தேடி வரப்போகிறது.
மிதுனம்: குருபகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.குருவின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு அதிசய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. திடீர் பண வரவு வரும். வீடு வாங்கும் யோகம் தேடி வரும். வண்டி வாகனம் வாங்கலாம். வேலை செய்யும் இடத்தில் திடீர் இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உறவுகள் இடையே இருந்த பகை நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
கடகம்: குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குருபகவானின் முழு பலனும் உங்களுக்கு இனி கிடைக்கப்போகிறது. பணம் பல வழிகளில் இருந்தும் வரப்போகிறது. தொட்டது துலங்கும். நினைத்த காரியம் கைகூடி வரப்போகிறது. குருவின் நட்சத்திர மாற்றம் குடும்பத்தில் குதூகலத்தை தரப்போகிறது. இனி வரும் நாட்களில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுபகாரியங்களை முன்நின்று நடத்துவீர்கள்.
சிம்மம்:சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருபகவான் சந்திரன் நட்சத்திரமான ரோகிணியில் இடம் மாறியுள்ளார். தொழில் ஸ்தான குரு திடீர் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தேடி தரப்போகிறார். புது வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. சொந்த வீடு வாங்கும் யோகம் தேடி வரும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் உண்டாகும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சந்திரனின் நட்சத்திரத்தில் குருபகவானின் பயணம் இருப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம் உங்களின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் செல்வீர்கள்.
பைடன், ட்ரம்ப் நேரடி விவாதம்.. அனல் பறந்த குற்றச்சாட்டுகள்