குழந்தை பிரசவித்த சிறுமி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

Spread the love

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.