க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நவம்பவர் மாதம் 27ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும், நவம்பர் 28ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும், நவம்பர் 29ஆம் திகதிக்கான பரீட்சை டிசம்பர் 27ஆம் திகதி இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நவம்பர் 30ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை, டிசம்பர் 28ஆம் திகதியும் டிசம்பர் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த் பரீட்சை, டிசம்பர் 30ஆம் திகதியும், டிசம்பர் 3ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 31ஆம் திகதியும் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்