க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

நேற்றைய தினம் (09) வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை சில மாணவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து மற்றுமொரு தரப்பினருக்கு அனுப்பி அதற்குரிய விடைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் குறித்த மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள காவல்துறை நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …