அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகள் ஊடாக பதவியைத் தக்கவைத்துக்கொள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதை தற்போதைய ஜனாதிபதியின் சீடர்கள் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்.
அவருக்கு மக்களாணை என்பது கிடையாது.
அவர் திருடர்களைப் பாதுகாக்கும் பணிகளையே முன்னெடுத்துள்ளார்.
சிலருக்கு அதிகாரம் இல்லாமல் உறக்கம் வருவதில்லை.
அவ்வாறானவர்கள் பல சதிகளை முன்னெடுத்து ஆட்சியைத் தக்க வைக்க முயல்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு அவ்வாறான எந்தத் தேவையும் இல்லை.
எமக்கு திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை.
மக்களின் சக்தியே எமது பலம் எனவும் திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனைவரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி