சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இரவு முதல் பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கான சுகாதார அமைச்சின் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன நேற்று இரவு குறித்த கடிதத்தைப் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு வழங்க முற்பட்டுள்ளார்.
அதனைக் குறித்த வைத்திய அத்தியட்சகர் ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் ஏதேனும், உயிரிழப்பு ஏற்பட்டால் தாமே பொறுப்பு என அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக பொது அமைப்புக்களினால் இன்றைய தினம் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலைகளை வகைப்படுத்தக் கூடாது – சஜித்