Monday , 13 October 2025
சிந்துநதி
சிந்துநதி

சிந்துநதி ஒப்பந்தத்தை மீறியதற்கு பாகிஸ்தான் கண்டனம்!

சிந்துநதி ஒப்பந்தத்தை மீறியதற்கு பாகிஸ்தான் கண்டனம்!

சிந்து நதி ஒப்பந்தத்தை மீறியுள்ள இந்தியாவின் செயலை, போர் போன்ற நடவடிக்கையாக பார்ப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கையை கண்டிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை, இந்தியா தொடர்பு படுத்துவதை கண்டிப்பதாகக் கூறி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு துணை பிரதமர் இஷாக் தர் தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்..

தீர்மானத்தின் மீது பேசிய அவர், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார். ஆனால், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டுவதாக கூறியுள்ள இஷாக் தர், சிந்து நதி ஒப்பந்தத்தை புறக்கணித்து, மீறியிருப்பதை, போர் போன்ற நடவடிக்கையாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தியாவை கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோடி Resign பண்ணனும்..! சுப்ரமணியன் சுவாமி

Check Also

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் …