சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி செயற்படுகிறது – டக்ளஸ்

Spread the love

இலங்கை தமிழரசு கட்சி சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.