தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.